சென்னையில் வீ்ட்டில் தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்தது எப்படி? காமுகன் பரபர வாக்குமூலம்
Recommended Video

சென்னை: கத்தி முனையில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய மேற்கொண்ட வழிமுறைகள் குறித்து சென்னையில் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை குமரன் நகர் பகுதியில் போலீசாரின் வாகன தணிக்கையில், சிக்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் (29) பெரிய வழிப்பறி கொள்ளையன் என்பதும், சென்னையில் சுமார் 50 பெண்களை கத்தி முனையில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அறிவழகன் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளான். அது எப்படி என்பது குறித்து வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

பலாத்காரம், கொள்ளை
வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடும் அறிவழகன், பட்டப்பகலில், யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடிப்பானாம். அழகான பெண்கள் என்றால் பலாத்காரமும் செய்துள்ளான். திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் இப்படி அறிவழகனால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தங்கள் மானம் போய்விடும் என நினைத்து, போலீசாருக்கு சொல்லாமல் மறைத்துவிட்டதால் அது அறிவழகனுக்கு வசதியாக போயுள்ளது.

மீண்டும், மீண்டும் பலாத்காரம்
பலாத்காரம் செய்யும் இடத்தில் செல்போனை வைத்து அதை வீடியோவாக எடுக்கும் அறிவழகன், பிறகு மீண்டும் அதே பெண்களை அணுகி வீடியோவை கணவன் அல்லது குடும்பத்தாரிடம் காட்டிவிடுவேன் என்று மிரட்டி மீண்டும் அவர்களை பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது. வீடியோ வெளியே வந்துவிடுமோ என்று அஞ்சி அந்த பெண்கள் கணவன் மற்றும் போலீசாரிடம் தகவல் சொல்லவில்லை.

குடிநீர் குழாய் டெக்னிக்
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் நுழைய அறிவழகன் பலே திட்டங்களை போட்டுள்ளான். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். நைசாக அந்த குடிநீர் குழாயை திறந்து விடுவானாம். சத்தம் கேட்டு குடிநீர் குழாயை மூட, அவர்கள் கதவை திறந்து வெளியே செல்லும்போது, மறைந்திருக்கும் அறிவழகன் வீட்டுக்குள் போய்விடுவானாம்.

பின்வாசல் வழியாக
தண்ணீர் குழாயை அடைத்துவிட்டு வீட்டுக்குள் வந்து அந்த பெண்கள் கதவை தாழிட்டதும், அவர்கள் மீது பாயும் அறிவழகன், கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்வானாம். அழகான பெண்கள் இருந்தால், அந்த வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும் அவர்களை பலாத்காரம் செய்துள்ளான் அறிவழகன்.

தண்ணீர் கேட்டும் நுழைவது
இதேபோல தாகமாக இருக்கிறது, தண்ணீர் தாங்க என வீட்டுக் கதவை தட்டுவானாம். கதவை திறந்து பெண்கள் தண்ணீர் கொடுத்தால் உடனே வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் அறிவழகன். சென்னையில் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications