கல்யாணமண்டபத்தில் நகை, பணத்தை திருடிய திருடன்... சிசிடிவி வீடியோ மூலம் போலீஸ் வேட்டை
சென்னை: குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், மொய் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மறைமலை நகரை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஸ்டோ ஒன் 2வது தெருவை சேர்ந்தவர் காமராஜ், 56. இவர், அதே பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீபிகாவிற்கும், பெருங்களத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் குரோம்பேட்டை சி.எல்.சி ஒர்க்ஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

சனிக்கிழமையன்று மாலை திருமண வரவேற்பு நடந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் பரிசு பொருட்கள் அனைத்தையும் மணமகள் அறையில் வைத்து விட்டு மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் சாப்பிட சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில் நுழைந்து அங்கு பையில் வைத்திருந்த பல ஆயிரம் மொய் பணம், 6 சவரன் நகை, 4 பட்டுப்புடவைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுவிட்டார்.
மணமகள் வீட்டார் உணவு சாப்பிட்டு முடிந்ததும், அறைக்கு வந்து பார்த்தபோது அந்த பையை காணவில்லை. மண்டபம் முழுவதும் தேடி பார்த்தும் பை கிடைக்கவில்லை. இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மண்டபத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம ஆசாமி ஒருவன், மணமகள் அறையில் இருந்து நகை, பணம் இருந்த பையை திருடிக்கொண்டு நைசாக வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. வீடியோவில் பதிவான மர்ம நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு வீட்டாரிடமும் உள்ள வீடியோவில் பதிவான நபரின் படத்தை போலீசார் கண்டுபிடித்த போதும், அவர் யார் என்று தெரியவில்லை என கூறினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications