தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள்: மணியரசன் கடும் குற்றச்சாட்டு
தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Recommended Video

சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் கேட்க பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்தனர். சூரப்பா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜா, மணியரசன் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது தமிழர்கள் ஊழல் செய்வதால்தான் வெளிமாநிலத்தவரை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளதாக ஆளுநர் நியமனத்தை நியாயப்படுத்திய தமிழிசை மற்றும் பொன்னார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உரிமை கொடுக்காது
அதற்கு மணியரசன் கூறுகையில் தமிழர்கள் ஊழல்வாதிகள் என்றால் இவர்கள் யார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பச்சை துரோகம் செய்கிறார்கள். பதவிக்காக எவ்வளவு முயன்றாலும் இவர்கள் இருவருக்கும் பாஜக தலைமை சம உரிமை கொடுக்காது.

ஐபிஎல்லை தடுத்திருக்கலாம்
எட்டி உதைக்கும் காலை தமிழக ஆட்சியாளர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பச்சைக் கொடி காட்டுவோரை தமிழக மக்கள் துச்சமெனத் தூக்கி எறிவார்கள். தமிழக அரசு நினைத்திருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டை தடுத்திருக்கலாம் என்றார் மணியரசன்.

தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா
இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரை ஏன் துணை வேந்தராக்கினீர்கள்? தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா? இதற்கு தமிழக அரசுதான் காரணமா.

மாலை 5 மணிக்கு கூடுவோம்
இசைப்பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் வேறு மாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சிலை அருகே கூட உள்ளோம். ஐபிஎல் போட்டிகளை எதிர்ப்பது தார்மீகக் கடமை. தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் பாரதிராஜா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications