வருகிறது பொங்கல்... பானையில் கட்டப்படும் மஞ்சள் குலை உற்பத்தி களை கட்டுகிறது

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் குலை முக்கிய பங்கு வகிக்கும். இந்த மஞ்சள் குலை தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மஞ்சள் குலையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு மஞ்சள் குலை உற்பத்தி அபாரமாக உள்ளது. சேர்வைககாரன் மடத்திலிருந்து சிவத்தையாபுரம் வரை வயல் முழுவதும் மஞ்சள் குலையாக காட்சி தருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் விளையும் மஞ்சள் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வெளி மாநில வியாபாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விவசாயிகளிடம் மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், வயது தெரிந்ததில் இருந்து மஞ்சள் பயிரிட்டு வருகிறோம். மஞ்சள் விளைப்பதற்கும் முன் குழி தோண்டவும், மண் குவிக்கவும் பணியாளர்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அதே போன்று களை எடுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை.
மோட்டார் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் பார்த்து வருவதால் கூடுதல் செலவு ஏற்படுகின்றது. இதனால் அனைத்து விவசாயிகளும் குறைந்த பரப்பிலேயே மஞ்சள் பயிரிடுகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் தோட்டத்தகு்கு வந்த மஞ்சளை பார்த்து விலை நிர்ணயம் செய்கின்றனர்.
குலை ஓன்று ரூ.10லிருந்து ரூ.12 வரை போகும். இந்த ஆண்டு மஞ்சள் குலை உற்பத்தி அதிகமாக இருந்தாலும் கூட எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications