சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை..சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

விடிய விடிய மழை

விடிய விடிய மழை

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மீண்டும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

சாரல் மழை

சாரல் மழை

வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் காலை வரை சாரல் மழை பெய்தது. மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

காற்றழுத்த தாழ்வுநிலை

காற்றழுத்த தாழ்வுநிலை

இதனிடையே மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+