இந்தியாவில் முதல்முறையாக சூரிய கதிர்களை குவித்து வரையும் தமிழக ஓவியர்.. கால்கள் முடங்கியும் புதுமை!
மயிலாடுதுறை: இந்தியாவிலேயே முதன்முறையாக சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி; சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் வரைகிறார் மயிலாடுதுறை இளைஞர். இவர் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டாலும் வீட்டில் முடங்கிவிடாமல் புதுமையான ஓவியத்தை புகுத்தி வருகிறார்.
Recommended Video
மயிலாடுதுறை தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ் (30). எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்த இவர் நிரந்தர வேலை இல்லாததால் மயிலாடுதுறைக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில் ரத்தசோகை பாதிப்பால், 2017-இல் நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அப்போது மனச்சோர்விலிருந்து மீள்வதற்காக பொழுதுபோக்காக ஓவியம் வரைய ஆரம்பித்தார்.

யூடியூப், இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து ஓவியத்தில் ஏற்பட்டு ஆர்வம் காரணமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து பென்சில் டிராயிங், 3டி தத்ரூப முப்பரிமாண ஓவியம், சார்கோல் டிராயிங் (கரித்துண்டை பயன்படுத்தி வரையும் ஓவியம்), ஆயில் பெயின்டிங், நுண்சிற்பங்கள் மற்றும் நுண்ஓவியங்களை (மினியேச்சர்) கற்றுத் தேர்ந்துள்ளார்.

மரப்பலகை
இவற்றில், சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியைக் கொண்டு மரப்பலகையில் குவித்து நெருப்பை உருவாக்கி இவர் படைக்கும் சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பாப்பாடாஸ்கி என்ற பிரபல ஓவியர் வரையும் இவ்வகை ஓவியங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த இவர் அக்கலையின்மேல் மோகம் கொண்டுள்ளார்.

வெயில்தான் ஓவியத்துக்கு மூலதனம்
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தினமும் வரைந்து தள்ளுகிறார். வெயில்தான் இந்த ஓவியத்துக்கான மூலதனம் என்பதால், சுட்டெரிக்கும் வெயிலில் இந்த ஓவியங்களை வரைகிறார். தனுஷ், அஜீத், விஜய் சேதுபதி, கேஜிஎஃப் யாஷ் மாஸ்டர் படத்தில் உள்ள விஜய், சார்பட்டா பரம்பரை ஆர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தலைவர்களின் ஓவியங்கள் என 28 ஓவியங்கள் வரைந்துள்ளார்.

ஓவியம் வரையும் முதல் ஓவியர்
இந்தியாவிலேயே இக்கலையைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் முதல் ஓவியராக தான் ஒருவரே உள்ளதாக கூறும் விக்னேஷ் சூரிய ஒளியில் ஒரு ஓவியத்தை உருவாக்க 3 நாள்கள் வரை கூட ஆகின்றன என்கிறார். மேலும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்ச்சிலோ பாரங்கி வரையும் 3டி தத்ரூப முப்பரிமாண ஓவியங்களையும், அமெரிக்காவின் வில்லியம் விஷார்டு வரையும் நுண்சிற்பங்களையும் சமூக வலைதளங்களில் பார்த்து, அவர்களை மானசீக குருவாக ஏற்று விக்னேஷ் வரையும் ஓவியங்கள் உயிரோவியங்களாக காட்சியளிக்கின்றன.

3டி ஓவியம்
ஒரு ஆட்டுக்குட்டியை கையில் வைத்திருக்கும் 3 டி ஓவியத்தை உருவாக்க அதிகபட்சமாக இவர் எடுத்துக் கொண்டது 47 நாட்கள். இந்த ஓவியத்தை பாதுகாப்பாக வைத்துள்ளார். மேலும், அரிசியில் ஓவியம், சாக்பீசில் உருவங்கள், பென்சிலில் வரையும் ஓவியங்கள், வரலாற்று சின்னங்களை சிறிய உருவமாக செதுக்குதல் 2 சென்டிமீட்டரில் மயிலாடுதுறை மணிகூண்டு, வத்திகுச்சி சிற்பம் போன்றவற்றிலும் இவர் தனித்துவமாக விளங்குகிறார்.

பொருளாதார நிலை
மிகச்சிறந்த ஓவியராக உருவாகியுள்ளபோதிலும் இவரது பொருளாதார நிலை மட்டும் இன்னமும் தாழ்ந்தே உள்ளது. தையல் தொழிலாளியாக உள்ள இவரது தந்தையின் வருமானத்திலேயே இன்னமும் குடும்பம் நடந்து வருகிறது. இவரது சொற்ப வருமானம் இவரது தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. போதிய பொருளாதாரம் இல்லாததால் சாதனை புத்தகங்களில் இடம்பெறமுடியவில்லை என்றும் இதனால் தான் செதுக்கிய படைப்புகளை சமூக வலைதளங்களில் விக்கி 3டி ஆர்ட் (Vicky 3D Art) என்று யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து பிரபலமடைந்து வருகிறார்.

ஷேர்சாட் பக்கம்
மேலும் ஷேர்சாட் பக்கத்தில் பிரபல ஓவியர் என்ற கோல்டு டேக் அங்கீகாரம் பெற்றுள்ளார். பிக்பாஸ் லோகா கண் வரைந்து இரண்டாவது வின்னர் என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் சென்னையைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் தான் கற்ற கலையை கற்பித்துவரும் இந்த இளைஞர், தன்திறமையை மற்றவர்களுக்கும் கற்பித்து பல ஓவியர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கல்லை எரித்து ஓவியம் வரைவது தனது அடுத்த இலக்கு என்று கூறும் விக்னேஷ் போல் திறமையான ஓவியர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து ஓவியக் கலையை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications