உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மத்திய அரசு அதிகாரியை மிரட்டிய பெண் கைது! மயிலாடுதுறை போலீஸ் அதிரடி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காரைக்கால் மத்திய அரசு அதிகாரியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி ரூ 10 லட்சம் பணம் கேட்ட பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே ரூ 2.70 லட்சத்தை ஜிபே மூலம் அரசு அதிகாரியிடம் பெற்ற நிலையில் வீடியோவை வெளியிடாமல் இருக்க மேலும் 10 லட்ச ரூபாயை தருமாறு கேட்டதாக புகார் எழுந்தது.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் 59 வயது அரசு அதிகாரி வெங்கட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மத்திய பொதுப் பணித் துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மயிலாடுதுறையை சேர்ந்த சுபா என்ற 40 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் இவர்கள் கடந்த 6 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அந்த பெண் காரைக்காலுக்கு வரும் போதெல்லாம் அந்த அரசு அதிகாரியிடம் குடும்ப கஷ்டத்தை சொல்லி சிறுக சிறுக பணத்தை பெற்றதாக தெரிகிறது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்குவதற்கு பதிலாக மொத்தமாக பணத்தை பெறலாம் என சுபா திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த போது அவருக்கு நினைவுக்கு வந்தது வீடியோ எடுப்பது! இதையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி வழக்கம் போல் சுபா காரைக்காலுக்கு அந்த அதிகாரி வெங்கட்டை பார்க்க சென்றார்.
அங்கு இருவரும் வழக்கம் போல் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெங்கடேசனுக்கே தெரியாமல் தாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை தனது செல்போனில் சுபா படம் பிடித்துக் கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி சுபா, வெங்கட்டுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரை மயிலாடுதுறையில் உள்ள காவேரி நகர் பகுதியில் ஒரு லாட்ஜுக்கு வர சொல்லியுள்ளார்.
வெங்கட்டும் லாட்ஜ் என்ற சொல்லை கேட்டதும் ஆசை ஆசையாக ஓடி வந்துள்ளார். இந்த நிலையில் சுபா, மயிலாடுதுறையை சேர்ந்த பிரகாஷ், முகமது நசீர், கடலூரை சேர்ந்த தினேஷ் பாபு உள்ளிட்டோரை விடுதிக்கு வரவழைத்துள்ளார். லாட்ஜுக்கு வந்ததும் வெங்கட்டுக்கு ஒரே அதிர்ச்சி!
உடனே அவர் சுபாவிடம் ,"இவர்கள் எல்லாம் யார் , எதற்காக என்னை வர சொன்னே" என கேட்டுள்ளார். அதற்கு அந்த கூட்டாளிகள் வெங்கட்டின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. உடனே வெங்கட்டிடம் ஜிபே மூலம் ரூ 2.70 லட்சத்தை பெற்றுள்ளனர். சுபாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் மேலும் ஒரு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுபா, முகமது நசீர், பிரகாஷ், தினேஷ் பாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். சுபாவை திருவாரூர் மகளிர் சிறையிலும் மற்ற மூவரை மயிலாடுதுறை கிளை சிறையிலும் அடைத்தனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications