ஒரே நாளில் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வைகோ
சென்னை: மதிமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்ட வேட் பாளர்களின் பட்டியல் 16ம் தேதி சனிக்கிழமை வெளியிடப் படுகிறது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு பிரச்சாரம் கிளம்புகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 27 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வழங்கப்பட்டது. வேட்பாளர் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம்.

அதைத்தொடர்ந்து, நேர்காணல் பிற்பகல் 3 மணி முதல் நேர்காணல் தொடங்கியது. 7மணி முதல் நேர்காணல் நடத்தும் வைகோ சனிக்கிழமையன்று சென்னை அண்ணா நகரில் காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார் என மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் ஜனவரி மாதமே விருப்பமனு கொடுத்து மார்ச் மாத இறுதிக்குள் நேர்காணல் நடத்தி முடித்து கடந்த வாரமே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.

மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவும் 4 பகுதிகளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று மாலை இறுதி செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவில் ஒரே நாளில் விருப்பமனு வழங்கி, நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போகிறார் வைகோ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications