விருதுநகரில் பிரமாண்டமான மதிமுக மாநாடு.. தொண்டர்கள் குவிந்தனர்
விருதுநகர்: விருதுநகரில் இன்று காலை பிரமாண்டமான மதிமுக மாநில மாநாடு தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி தொடங்கி இரவு வரை மாநாடு நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் விருதுநகரில் குவிந்துள்ளதால் விருதுநகரே மதிமுக தொண்டர்கள் மயமாக காணப்படுகிறது.

நகர் முழுவதும் கொடிகள் - பிளக்ஸ் போர்டுகள்
மாநாட்டிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மதிமுக கொடி மயமாக காணப்படுகிறது.

அண்ணா பிறந்த நாளன்று
இன்று அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த மாநாட்டுக்கு மதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

சூலக்கரையில்
விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் உள்ள சூலக்கரையில் மாநாடு நடைபெறுகிறது.

பிரமாண்ட பந்தல்
பிரமாண்டமான அளவில் நவீன உள் அலங்காரத்துடன் சூலக்கரையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மதிமுக தொண்டர்கள் வேன், பஸ்கள் உள்ளிட்டவைகளில் வந்து குவிந்துள்ளனர்.

சரித்திரம் படைக்கும்
மாநாடு குறித்து முன்னதாக வைகோ கூறுகையில், சரித்திரத்தில் இடம்பெறுகிற வகையில் இந்த மாநாட்டில் 2 லட்சம் பேர் வரையில் பங்கேற்கவுள்ளனர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறும் இல்லாமல், அவர்களை கவரும் வகையில் இம் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டு வளாகத்தில் பெரியார் தொடர்பான படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தலையொட்டி தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் லோக்சபா தேர்தலை மையமாக வைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டணி குறித்த அறிவிப்பு
மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பும் முக்கியமாக இடம் பெறும் என்று தெரிகிறது.

சாப்பாடு வசதி
மாநாட்டில் மருத்துவ அணி சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருகிற அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கெங்கும் மதிமுக மயம்
மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்ட எல்லை தொடங்கி, மாநாடு நடைபெறவுள்ள இடம் வரையில் நான்கு வழிச் சாலையில் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், அலங்கார விளக்குகள், குழல் விளக்குகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications