காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு வரவழைக்கப்பட்ட மருந்துகள்
கருணாநிதி சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு மருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினர் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு மருந்துகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை நடைபெற்றது. பின்னர், வீட்டுக்கு வந்த கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு சிறுநீர் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனையில் அளிக்கக் கூடிய சிகிச்சை அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுவினர் இன்று மதியம் வாகனத்தில் மருந்துப் பொருட்களையும் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து திமுக தலைவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications