எம்எல்ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கே அதிகாரம்... உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் பதில்
டெல்லி : எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், செயலாளர் ஜமாலுதீன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு, சட்டப்பேரவை சபாநாயகர், செயலாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் சார்பாக வழக்கறிஞர் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க முடியும். பேரவை விதிகளை மீறியதால், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
எம்எல்ஏக்கள் இடைநீக்கம் சட்டப்பேரவை அதிகார வரையறைக்குள் வருகிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் முடிவை சட்ட ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications