எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: பேனர்களை அகற்ற உத்தரவு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அதிமுகவினர் விதியை மீறி வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அதிமுகவினர் விதியை மீறி வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் மிகவும் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இன்று மாலை சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது.
[எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: படையெடுத்த அதிமுகவினர்.. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ]
மாலை 4 மணிக்கு இந்த விழா தொடங்கும் .இதற்காக சென்னை முழுக்க பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பாதசாரிகள் நடக்கும் நடைமேடையில் இப்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் விதியை மீறி இதுபோல் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதையும் மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர்கள் விதிமுறையை மீறி வைக்கப்பட்டு இருப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
அதில் பதில் அளித்த தமிழக அரசு 120க்கும் அதிகமான முறைகேடான பேனர்களை அகற்றிவிட்டோம். வேறு எங்கும் விதிமுறையை மீறி பேனர் வைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதற்கு டிராபிக் ராமசாமி தரப்பு, அவர்களே முறைகேடாக பேனர் வைத்ததை ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நிறைய பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதையும் நீக்க வேண்டும் என்றனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக முறைகேடாக விதியை மீறி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications