எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: படையெடுத்த அதிமுகவினர்.. சென்னையில் போக்குவரத்து நெரிசல்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா காரணமாக சென்னைக்கு அதிமுகவினர் படையெடுத்து இருப்பதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா காரணமாக சென்னைக்கு அதிமுகவினர் படையெடுத்து இருப்பதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடக்க உள்ளது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் முன்னிலை வகிப்பார். விழாவின் ஒரு நிகழ்வாக இவர் எம்ஜிஆர் பொன் மொழி தொகுப்பை வெளியிட இருக்கிறார். இன்று மாலை சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு இந்த விழா தொடங்கும் .

ஏற்பாடுகள் தீவிரம்
இந்த விழாவிற்காக ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக முழுக்க பல பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இதற்காக குவிந்து இருக்கிறார்கள். சென்னையில் இன்று கூடுதலாக 17000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
[தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை.. பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்ட ஆளுயர பேனர்கள் ]

பேனர்
இதற்காக சென்னை முழுக்க பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக விழா நடக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் செல்லும் சாலை முழுக்கவும், சென்னையில் பிறபகுதிகளிலும் இப்படி பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பாதசாரிகள் நடக்கும் நடைமேடையில் இப்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் இதுபோல் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர் வைக்க கூடாது என்று கூறியுள்ளது. அதையும் மீறி தற்போது சென்னையில் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.

பல பேர் வந்தனர்
இதனிடையே விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊரில் இருந்து ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் சென்னைக்கு வந்துள்ளனர். அதிமுகவை சேராத எம்ஜிஆர் அபிமானிகளும் சென்னையில் குவிந்து இருக்கிறார்கள். எல்லா மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களும் சென்னைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கடும் நெரிசல்
இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பல மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் கார், பேருந்துகளில் சென்னை நோக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அச்சிறுப்பாக்கம் முதல் மதுராந்தகம் வரை, சைதாப்பேட்டை முதல் கிண்டி வரை, திருச்சி - சென்னை நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications