காதில் பட்ஸை விட்டு நோண்டி புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்- மருத்துவமனையில் சிகிச்சை
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காதில் பட்ஸை விட்டு நோண்டி புண்ணாக்கி கொண்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காதில் பட்ஸை விட்டு நோண்டி புண்ணாக்கி கொண்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக தகவல் வெளியானது.

பட்ஸ் வைத்து சுத்தம் செய்துள்ளார்
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பட்ஸ் வைத்து தன் காதை சுத்தப்படுத்தியுள்ளார்.

காதில் புண்ணாகி விட்டதாம்
அப்போது காதில் புண்ணாகி விட்டதாம். இதையடுத்த தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சர்க்கரைநோயும் உள்ளது
அவரை பரிசோதித்த மருத்துவர் காதில் மருந்து போட்டு 2 மணி நேரம் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்கச்சொல்லியுள்ளனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பு
இருப்பினும் அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று நடைபெறும் ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பொய் சொன்னோம்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லியும் சாப்பிடவில்லை சட்னியும் சாப்பிடவில்லை நாங்கள் பொய் சொன்னோம் எனக் கூறி அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
