அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி.. புழல் சிறையில் கம்பி எண்ணுவார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்
அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவள்ளூர்: அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 100 கோடிக்கும் மேல்அமைச்சர்களுக்கு லஞ்சபணம் பணம் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட வழங்கும் விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகே எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் மோடி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை சரமாரியாக விளாசினார்.

மருமகளை மாமியார் ஆட்டிவைப்பதுபோல்
அப்போது காமராஜர் பெயரை சொல்வதற்குக்கூட பாஜகவிற்கு அருகதை இல்லை. அவரை கொல்ல நினைத்த ஆர்எஸ்எஸ்காரர்கள் மருமகளை மாமியார் ஆட்டிவைப்பது போல் பாஜகவை ஆட்டுவிக்கின்றனர்.

பாஜகவுக்கு தகுதியில்லை
காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட அவர்களுக்கு தகுதி இல்லை. பட்ஜெட் நூறு கோடிபணத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் காமராஜர்.

ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம்
ஒரு நாளைக்கு 100 கோடிக்கும் மேல் அமைச்சர்களுக்கு லஞ்சபணம் பணம் வருகிறது. இதுதான் காங்கிரஸ் முதல்வருக்கும் மற்ற முதல்வருக்கும் உள்ள வித்தியாசம்.

சிறை செல்வது உறுதி
காங்கிரஸ் தமிழகத்தில் இல்லை அழிந்துவிட்டது என கூறும்
அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி. அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் கம்பி எண்ணுவார்.

வீட்டிற்கு போவது உறுதி
மோடி வீட்டிற்கு போவது உறுதியாகிவிட்டது. அவரின் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள்
நாட்டுக்கு நல்லது செய்வது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தி என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

உரிய இழப்பீடு
8 வழி சாலை திட்டத்தினை வரவேற்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை வழங்கி வேறு இடத்தில் தண்ணீர் வசதியுடன் விவசாயம் மேற்கொள்ள நிலங்களை வழங்கிடவேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications