19 எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள் - அமைச்சர் காமராஜ்
19 எம்எல்ஏக்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மன்னார்குடி: எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி தினகரன் அழைத்து சென்றுள்ளதாகவும்,19 எம்எல்ஏக்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் உடன் எடப்பாடி பழனிச்சாமி அணி இணைந்ததற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்களை நீக்கி வருகிறார்.
ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக டிடிவி தினகரன் நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உருவபொம்மையை எரித்து போராடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள், டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள அமைச்சர் காமராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. மயில்வாகனம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், 19 எம்எல்ஏக்களும் தங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறினார். டிடிவி தினகரன், அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறிய காமராஜ், கட்சியில் இருந்து தன்னை நீக்க எந்த தகுதியும் தினகரனுக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications