என்னது பருப்பு விலை கூடிப்போச்சா? எங்கே என்று கேட்கிறார் அமைச்சர் காமராஜ்
சென்னை: நியாய விலைக்கடைகளில் ரூ.30க்கு துவரம் பருப்பு, உளுந்தப்பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு விலை நான்கு மடங்கு ஏறி உள்ளதாகவும், தமிழக அரசால் 500 டன் துவரம் பருப்பு 1 கிலோ ரூபாய் 110க்கு வழங்கப்பட உள்ளதை குறை கூறியும் உண்மைக்கு புறம்பான கருத்தினை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி பருப்பு விலை குறித்து 21.10.2015 நாளிதழ்களில் வெளியிட்ட அறிக்கையில் துவரம் பருப்பு விலை நான்கு மடங்கு ஏறி உள்ளதாகவும், மேலும் தமிழக அரசால் 500 டன் துவரம் பருப்பு 1 கிலோ ரூபாய் 110 க்கு வழங்கப்பட உள்ளதை குறை கூறியும் உண்மைக்கு புறம்பான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அம்மா அவர்களின் அரசு விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர் நடவடிக்கையாகத்தான் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 5000 டன் துவரம் பருப்பில் அம்மா அவர்களின் அரசு தமிழகத்திற்கு 500 டன் துவரம் பருப்பை பெற்று அதனை 1 கிலோ ரூபாய் 110 க்கு கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் வழங்குவதென முடிவெடுத்துள்ளது. ஆனால் தொடர்ந்து அம்மா அவர்களின் அரசு கனடா துவரம் பருப்பு மாதம் ஒன்றுக்கு 13,500 மெ.டன்னும், உளுத்தம் பருப்பு 7000 மெ.டன்னும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் மூலம் 1 கிலோ ரூபாய் 30க்கு வழங்கி கொண்டிருக்கிறது.
மேலும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் 1 லிட்டர் ரூபாய் 25 வீதம் பொதுமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கபட்டுவருகிறது. இதையெல்லாம் மறைத்து விட்டு ஏதோ 500 டன் துவரம் பருப்பு மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதைப்போல் ஒரு பொய்யுறையை கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
கனடா துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வெளி மார்க்கெட் விலையில் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு. அடிதட்டு மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் பருப்பு ரூபாய் 52க்கு கொள்முதல் செய்து ரூபாய் 30க்கு விற்பனை செய்தார்கள். அப்பொழுது மத்திய அரசு பருப்பு மற்றும் பாமாயிலுக்கு மானியம் வழங்கி வந்தது". ஆனால் அம்மா அவர்களின் ஆட்சியின்போது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய அரசு பருப்புக்கான மானியத்தை 2012 ஆம் ஆண்டு நிறுத்திய போதும், பருப்பு உற்பத்தியாகும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பருப்பு விளைச்சல் குறைவாக இருந்தால், ஏற்பட்டு இருக்கின்ற பருப்பு விலை ஏற்றத்தை கணக்கில் கொள்ளாமல் நிதி சுமை அனைத்தையும் தமிழக அரசே ஏற்று அதே 30 ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து கொண்டு இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடவே மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டபொழுதெல்லாம் அப்போதைய முதல்வர் கருணாநிதி "பாண்டி பஜாரை சென்று பார்த்தால் தெரியும் பொருள் வாங்க அலை மோதும் மக்கள் கூட்டத்தை என்றார்". மேலும் விலை உயர்வு குறித்து பேசும் போதெல்லாம் விலை எப்பொழுது உயராமல் இருந்தது என்றும் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்றும் பேசினாரே ஒழிய விலையேற்றத்தை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர விலை நிலைப்படுத்தும் நிதியம் ஏற்படுத்தப்பட்டு அதற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கி அதன் மூலம் விலைவாசியினை கட்டுப்படுத்த சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியத்தின் மூலம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு எப்பொழுதெல்லாம் விலை ஏறுகிறதோ அப்பொழுதெல்லாம் அதனை கட்டுப்படுத்த சந்தை தலையீடு செய்து உற்பத்தி மையங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் மிக குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. காய்கறி விலையை கட்டுப்படுத்த 58 பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
புளி விலை உயர்ந்த பொழுது தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம் ஆகிய இடங்களில் புளியை கொள்முதல் செய்து விற்பனை செய்ததால் வெளிசந்தையில் புளியின் விலை வெகுவாக குறைந்தது. மேலும் விலையில்லா அரிசி, சிறப்பு பொது விநியோக திட்டத்தில் பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் தொடர்ந்து எவ்வித தங்கு தடையுமின்றி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 5,300 கோடி ரூபாயை உணவு மானியத்திற்கு ஒதுக்கி அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து கொண்டிருக்கும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மட்டும்தான் என்பதை கருணாநிதி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications