சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 14 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தி நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில இன்று காலை 4.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. . இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

minister R.B. Udhaya Kumar review in Chennai silks area in chennai

கட்டிடத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறுவதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. அதிகப்படியான புகை வெளியேறுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் இருந்த தொடர்ந்து புகை வெளியேறுவதால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்து நடந்த பகுதியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தீயை அணைக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் சோர்வை குறைக்கும் வகையில் ஷிப்ட் முறையில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களின் சோர்வை குறைக்க ஷிப்ட் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+