எங்களை மத்திய அமைச்சராக்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு.. அதிர வைக்கும் அதிமுக அமைச்சர்
Recommended Video

அருப்புக்கோட்டை: அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையிலிருந்து அதிமுக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி திருச்சுழியில் நிறைவுற்றது. இதையடுத்து அங்கு நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதகம் வலுவாக உள்ளது. இதனால் தற்போதைக்கு ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது.
டெல்லியில் இனி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்ய முடியும். அதுவும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால்தான் ஆதரவளிக்க முடியும். இனி எந்த கட்சி அமைச்சர் பதவியை கொடுக்கிறதோ அந்த கட்சிக்கே ஆதரவு கொடுப்போம் என்றார்.
பெரும்பாலும் அதிமுக அமைச்சர்கள் சர்ச்சையை கிளப்பி பேசி வருவது வாடிக்கைதான் என்றாலும் மாற்றி மாற்றி பேசி வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரன்-அதிமுக மோதலின்போது ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களை மோடி காப்பாற்றுவார் என்று பகிரங்கமாக அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications