ஜெ. விரும்பி நியமித்த பெண் அதிகாரியிடமே லஞ்சம் கேட்ட அமைச்சர்.. கடும் கொதிப்பில் அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதா நியமித்த அதிகாரியிடம் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் உண்மையான அதிமுக தொண்டர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரியிடமே அமைச்சர் மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி. குழந்தைகள் தொடர்பான சமூக பணிகளில் ஈடுபட்டவர். இதனால் ஈர்க்கப்பட்டார் ஜெயலலிதா. மேலும் மீனாட்சியின் குடும்பம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான குடும்பம்.

இதையெல்லாம் வைத்து, லஞ்சம் இன்றி, மீனாட்சிக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செல்வாக்கால் அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
"இந்த நிலையில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு அதிகாரி பணியாற்றுவதா?" என 'அறச்சீற்றம்' அடைந்துள்ளார் அமைச்சர் சரோஜா. புதிதாக ஒரு அதிகாரியை இப்பணியிடத்திற்கு நியமித்தால் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கிடைக்கும். ஒன்று பணத்தை கொடு, அல்லது இடத்தை காலி செய், என சரோஜாவின் கணவர் லோகநாதன் மிரட்டியதாக மீனாட்சி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் இது அம்மா ஆட்சி என உணர்ச்சி பொங்க கூறிக்கொண்டும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது காலில் சாஸ்டாங்கமாக விழுந்துகொண்டும் இருந்த அமைச்சர்களில் ஒருவரே, இப்போது, ஜெயலலிதா நியமித்த அதிகாரியிடம் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் உண்மையான அதிமுக தொண்டர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்குமோ தெரியாது, அதற்குள்ளாக சுருட்ட வேண்டிய அளவுக்கு, சுருட்டி பணத்தை அள்ளிவிட வேண்டும் என்ற ஒரு ஓட்டம், அரசு மட்டத்தில் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications