விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை.. தியானம்தான் செய்தார்.. சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ!
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானம் தான் செய்தார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானம் தான் செய்தார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தே இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வலுக்கும் கண்டனங்கள்
ஸ்டாலின், திருமாவளவன், வேல்முருகன், வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவத்துள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தியானம்தான் செய்தார்
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரர் நேர்மையானவர்
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு கட்டியுள்ளார். விஜயேந்திரர் நேர்மையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
விஜயேந்திரர் அனைவரையும் மதிக்கக்கூடியவர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். விஜயேந்திரருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications