ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி.. ஏன் தெரியுமா?
தமிழக கல்வித் துறையையும் அமைச்சரையும் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் பாராட்டியதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்பு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செங்கோட்டையனிடம் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிட்டால், கல்வி சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தது குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு, நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் மேலும், கூறியதாவது: தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐஏஎஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் அடுத்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பாடம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதேபோல, சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்துக்கு, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications