ஸ்டாலின் கைதைக் கண்டித்து அமைச்சரின் வீட்டைமுற்றுகையிட்ட திமுகவினர்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மீதான தாக்குதல் மற்றும் கைதைக் கண்டித்து திமுகவினர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஸ்டாலின் மற்றும் பலர் தாக்கப்பட்டு அவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.

இதனைக் கண்டித்து ஸ்டாலின், துறைமுருகன், கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை மெரினா கடற்கரையில் அறவழிப் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆரணியில் திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சேவூரில் உள்ள அமைச்சர் ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். திமுகவினரின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications