சபாஷ்.. டுவிட்டரில் வந்த புகாரை பார்த்து, மின் விளக்கு அமைத்து கொடுத்த அமைச்சர் வேலுமணி!
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் நெருக்கமாக்கியுள்ளதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும். டுவிட்டரில் புகாரை பார்த்து சரி செய்து கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர்.
சென்னை: டுவிட்டரில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை தீர்த்து வைத்து பாராட்டை பெற்றுள்ளார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சென்னை சென்ட்ரலில் இருந்து பார்க் டவுன் வரை செல்லும் வழியில் மின் விளக்குகள் ஏதுமில்லாமல் இருட்டாக இருப்பதாக ட்விட்டரில் குறை தெரிவித்தவருக்கு,

உடனடியாக அக்குறைகளை சரி செய்து அவரது பாணியிலேயே மின்விளக்குகள் எரியும் படங்களுடன் பதிலளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி.
டுவிட்டரில் மின் விளக்கு பிரச்சினை பற்றி நெட்டிசன் ஒருவர் டுவிட் செய்ய, அதை பார்த்த அதிமுகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், டுவிட்டரிலேயே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனத்திற்கு கொண்டு சென்றார்.
@dhanyarajendran @TamilTheHindu @SiddharthPTOI @CMOTamilNadu @OfficeOfOPS @mafoikprajan @ChennaiCityNow @sruccspe @ikamalhaasan @maiamofficial Sir vital link needs attn.Pitch dark, close 2Chennai Central - Passage 4 Park Town, Park & Chennai Central stn.25000 foot fall per day pic.twitter.com/ALIx5EsJak
— yblk (@yblk) April 16, 2018
இதையடுத்து அதிகாரிகளுக்கு பிரச்சினையை சரி செய்ய அமைச்சர் உத்தரவை பிறப்பித்து, குறையை சரி செய்து, "வேலை முடிந்துவிட்டது தம்பி" என்று நேரிடையாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார் அமைச்சர் வேலுமணி.
Work completed thambi @RamaAIADMK pic.twitter.com/qdyNG6FZQv
— SP Velumani (@SPVelumanicbe) April 24, 2018
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் நெருக்கமாக்கியுள்ளதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும். இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications