For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணைக்கு ஆஜரான விஜயபாஸ்கர்... விசாரித்த 'கிடுக்குப் பிடி' வருமான வரி அதிகாரிகள் - வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், மாஜி எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதையடுத்து அவர்கள் கீதாலட்சுமி தவிர மற்ற மூவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகினர்.

இரண்டு நாட்களுக்கு சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாஜி எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 Minister Vijaya baskar and three more had long inquiry in Income tax office

அதில் விஜயபாஸ்கர் அலுவலகம், வீடு, எம்.எல்.ஏ விடுதி, சொந்த ஊரில் உள்ள வீடு, கல்குவாரி அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை 25 மணிநேரம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அதேபோல், கீதாலட்சுமி வீட்டில் 27 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சோதனைக்கு உள்ளான இந்த நால்வரும் வருமான வரித்துறையின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து கீதாலட்சுமி தவிர மற்ற மூவரும் ஆஜராகினர்.

அவர்களை தனித்தனி அறையில் வைத்து பலமணிநேரம், அதிகாரிகள் துருவித் துருவிக் கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர். இந்த சோதனையும் விசாரணையும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் கூறினார்.

English summary
Minister Vijaya baskar, Ex.MP Sitlapakkam Rajendran, Sarathkumar, Geetha lakshmi came to Income tax office for inquiry. Officials had a long time inquiry with them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X