அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள்... சசிகலா குடும்பம் மட்டும் கொலைகாரர்களா? விளாசிய சீமான்
அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள் சசிகலா குடும்பம் மட்டும் கொலைக்காரர்களா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள் சசிகலா குடும்பம் மட்டும் கொலைக்காரர்களா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.
சென்னை: வைகோ மீதான சிங்களரின் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திலீபன் நினைவேந்தல் கூட்டத்திற்குப் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐநா மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அத்தனை ஊடகங்கள் கவனித்துக்கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய வைகோ மீது தாக்குதல் நடத்திய சிங்களர்கள் அவர்களது மண்ணில் ஆயுதமின்றி நின்ற தமிழர்களை என்ன சித்ரவதை செய்திருப்பார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்றார்.

சிங்களர்களின் தாக்குதல் அநாகரிகமானது
சிங்களர்களின் தாக்குதல் அநாகரிகமானது என்ற சீமான், தான் பங்கேற்றிருந்தபோது தன்னையும் சுற்றி சுற்றி படமெடுத்தாக கூறினார். இதன் மூலம் சிங்கள பேரினவாதத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஐநா மனித உரிமை கவுன்சிலிலேயே சிங்கள பேரினவாதம் தமது முகத்தை காட்டியிருக்கிறது என்றும் சீமான் கூறினார்.

ஏதோ நடந்திருக்கிறது
ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான் அமைச்சர்கள் எல்லாம் பேசுவதில் இருந்து ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்திருப்பது மட்டும் தெரிகிறது என்றார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு சொல்வதை தான் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.

எல்லாரும் பொய் சொல்லியிருக்காங்க
முழுவதும் குணமடைந்துவிட்டார் என கூறப்பட்ட நிலையில் எப்படி ஜெயலலிதா திடீரென உயிரிழந்தார் என்று கேள்வி எழுப்பிய சீமான், ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவர்கள் உட்பட அனைவரும் பொய் கூறியிருப்பதாக சீமான் குற்றம்சாட்டினார். மருத்துவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர்கள் எல்லாம் புனிதர்களா?
சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு என்று கூறிய சீமான் அதனாலேயே ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் சசிகலா குடும்பத்தை கொலைக்கார குடும்பம் போல் சித்தரிப்பதாகவும் சாடினார். அமைச்சர்கள் எல்லாம் புனிதர்களா என்றும் சசிகலா குடும்பத்தினர் தான் கொலைக்காரர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்
சசி குடும்பம்தான் கொள்ளையடித்ததா?
சசிகலா குடும்பம்தான் நாட்டை கொள்ளையடித்ததா என்றும் அமைச்சர்கள் ஒருத்தரும் கொள்ளையடிக்கவில்லையா என்றும் அவர் விளாசினார். சேகர் ரெட்டிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்குமான தொடர்பு பற்றி யாரும் பேசுவதே இல்லையே என்றும் சீமான் தெரிவித்தார்.

இந்தி சமஸ்கிருதம் திணிக்கப்படும்
நவோதயா பள்ளிகள் மூலம் இந்தி சமஸ்கிருதம் திணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.நவோதயா பள்ளிகள் அதிகம் இருக்கும் உத்தரப்பிரதேசட் கல்வியில் 30-வது இடத்தில் உள்ளது என்றும் அது இல்லாத தமிழகம் 3வது இடத்திலும் கேரளா முதல் இடத்திலும் உள்ளது என்றும் சீமான் கூறினார்.

தமிழ் முன்னோர்கள் கண்டுபிடித்தது யோகா
தமிழ் முன்னோர்கள் கண்டுபிடித்தது ஓகா எனும் யோகா என்ற அவர் அனைத்துக்கும் தூய தமிழில் பெயர் உள்ளது என்றார். யோகா கலையில் மத அடையாளம் எங்கே இருந்து வந்தது? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications