தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. போலீஸ் வளையத்தில் பரமக்குடி...!
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளது. அங்கு இன்று அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி, அன்வர்ராஜா எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நினைவிடம் மற்றும் பரமக்குடியின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 ஐ.ஜி, 3 டி.ஐ.ஜி மற்றும் 15 எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முக்கிய இடங்களில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு பணியில் ஆள் இல்லாத விமானம் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடியில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தலித் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications