For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மிஸ் கூவாகம்" விழா.... மகிழ்ந்து கொண்டாடி அசத்திய திருநங்கைகள் - வீடியோ

விழுப்புரம் மவட்டம் கூவகத்தில் திருநங்கைகள் மிஸ் கூவாகம் என்ற போட்டியை நடத்தினர். அதில் அதில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா முதல் பரிசைப் பெற்றார். இரண்டாம் பரிசை சேலத்தைச் சேர்ந்த கவியும் மூன்றாம்

By Suganthi
Google Oneindia Tamil News

விழுப்புரம்:விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகள் கூடி 'மிஸ் கூவாகம்' விழாவை நடத்தினர். அதில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா முதல் பரிசை வென்றார். இந்த விழாவில்மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் திருநங்கைகளுக்கென சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரை மாதத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில்திருவிழாவில் அரவான் சுவாமியை தன் கணவராக நினைத்து தாலிக் கட்டிக்கொள்வர். பிறகு அரவான் களப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் அனைவரும் விதவை கோலம் ஏற்பார்கள்.

Miss Koovagam competition conducted by transgenders allover India

சில வருடங்களாக மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு,மும்பை, டெல்லி என இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் வந்து கலந்துகொள்வர்.

இந்தாண்டு நடைபெற்ற 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா முதல் பரிசை வென்றார். சேலத்தை சேர்ந்த கவி என்பவரும் மதிரையைச் சேர்ந்த வர்னிகா என்பவரும் முறையே இரண்டாம் மூன்றாம் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

முதன்முறையாக திருநங்கைகளில் கிரேஸ் பானு என்ஜினியராகப் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு மேடையில் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் திருநங்கைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை சோனியா போஸ் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

English summary
In Viluppuram Koovagam transgenders celebrated Miss koovagam competition. And Antria won first price. Salem Kavi and Madurai Varnika won second and third prize respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X