அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் அழகிரியின் ஐவர் குழு! 30ம் தேதி "திராணி' காட்ட தீவிரம்!!
மதுரை: தென்மாவட்டங்களில் திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதில் மு.க. அழகிரியின் ஐவர் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவை விமர்சித்து வருகிறார்.
அத்துடன் மதுரையில் 30-ந் தேதியன்று தமது பிறந்த நாளின் போது முக்கிய முடிவு எடுப்பேன் என்றும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் அழகிரி என்ன செய்யப் போகிறார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அழகிரிக்கு ஆதரவு இல்லையா?
அழகிரிக்கு ஆதரவாக எந்த ஒரு தென் மாவட்ட செயலரும் இல்லை என்பது ஸ்டாலின் தரப்பினரின் வாதம்.

குவிக்கப்பட்ட தென்மாவட்ட திமுக நிர்வாகிகள்.
இதற்காகவே அழகிரி நீக்கப்பட்ட போது தென்மாவட்ட திமுக நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த செய்தனர்.

அதிருப்தியாளர்களுக்கு வலை
ஆனால் அழகிரி தரப்போ தற்போது மாவட்ட செயலர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வளைக்கத் தொடங்கி இருக்கிறது. திமுகவில் அனைத்து மாவட்டங்களிலுமே நீண்டகாலமாக கோலோச்சி வரும் மாவட்ட செயலர்களுக்கு எதிராக எப்படியும் ஒரு அணி இருக்கவே செய்கிறது.

ஐவர் குழு
இப்போது இந்த அதிருப்தி அணியை வளைத்துப் போட்டு அழகிரி ஆதரவாளர்களாக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகிறது. இதற்காக மு.க. அழகிரியின் ஐவர் குழு ஒன்று தீவிரமாக செயல்பட்டும் வருகிறதாம்.

30ல் திராணி காட்டும் அழகிரி தரப்பு
மு.க. அழகிரியின் பிறந்த நாளான வரும் 30-ந் தேதியன்று இந்த "அதிருப்தி திமுகவினர்" மதுரையில் ஒன்று திரண்டு அழகிரியின் செல்வாக்கை திமுக தலைமைக்கு காட்ட வேண்டும் என்பதுதான் இந்த ஐவர் குழுவுக்கான அசைன்மென்ட் என்கிறது மதுரை திமுக வட்டாரங்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications