அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகா சூரப்பா நியமனம்- தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்: ஸ்டாலின்
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்திருப்பது தமிழகத்தின் தன்மானத்தின் மீதான தாக்குதல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமிக்கக் கூடாது என்பது கல்வியாளர்களின் வலியுறுத்தல். ஆனால் இதைப்பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் கர்நாடகா சூரப்பாவையே துணைவேந்தராக நியமித்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
— M.K.Stalin (@mkstalin) April 5, 2018
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) April 5, 2018
இது குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது சரியல்ல. ஆளுநர் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications