மறைந்த சிவனடியார் ஆறுமுக சுவாமிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கவும் அங்கே தமிழின் தேவாரம் ஒலிக்கவும் தொடர்ந்து போராடிய சிவனடியார் ஆறுமுகசாமியின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கவும் அங்கே தமிழின் தேவாரம் ஒலிக்கவும் தொடர்ந்து போராடிய சிவனடியார் ஆறுமுகசாமியின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பையும் அனாயசமாக எதிர் கொண்ட இவரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே தமிழகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது.

இதுதொடர்பாக நேருக்கு நேராக தீட்சிதர்களுடன் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு, 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பும் பலம் சேர்த்தது. தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரத்தை வெற்றியின் களிப்போடு ஓங்கி பாடினார்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே குமுடிமலை கிராமத்தில் 94 வயதான சிவனடியார் ஆறுமுகசாமி சனிக்கிழமை உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக செயல்தைலவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications