புண்ணியத்திற்காக கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
சென்னை: விவசாயிகளின் நன்மைக்காக ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வாருகிறது என்றும், புண்ணியம் தேடி கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார் என்றும் கூறி விமர்சனம் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதுகுறித்து முதல்வர் அளித்த பேட்டி: அரசுக்கு சொந்தமான ஏரி, குளங்களை தூர்வார உரிய அனுமதியை பெற வேண்டும். இதை அறிந்திருந்தும் முன் அனுமதியின்றி ஸ்டாலின் தூர்வார செல்வதால் தான் பிரச்சனை வருகிறது. விவசாயிகளின் நன்மைக்காக ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வாருகிறது . புண்ணியம் தேடி கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் 2,065 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெறவுள்ளன. குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடக்கும் நிலையில் அரசுக்கு களங்கம் விளைவிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். செண்பதோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் 21% சதவீதமாக இருந்த உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை, தற்போது 44.3%-ஆக உள்ளது. மாணவர்களின் நலனை காக்கும் அரசாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications