89 எம்.எல்.ஏ.க்கள் உள்ள திமுகவின் ‘பந்து’ வந்தால் என்ன நடவடிக்கை? ஆளுநருக்கு ஸ்டாலின் பரபர கேள்வி
89 எம்.எல்.ஏ.க்கள் உள்ள திமுகவின் பந்து வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: 89 எம்.எல்.ஏக்கள் உள்ள திமுகவின் பந்து வந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என ஆளுநருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமணத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட இயக்கத்தை பொறுத்தவரையிலே எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. கொல்லைப் புறமாக திமுக ஆட்சிக்கு வராது.
மக்களிடம் உரிமையுடன் ஆதரவு பெற்றுதான் ஆட்சிக்கு வருவோம். தற்போது அதிமுகவின் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
இந்த எண்ணிக்கை 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்ம் சூழ்நிலை உருவாகி உள்ளது.

திமுகவின் பந்து
89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய பந்து வந்தால் ஆளுநர் என்ன நட வடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போகிறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி.

திமுக முடிவு எடுக்கும்
இப்பவே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திமுக ஒரு முடிவு எடுக்கும்.

மாற்றமே இல்லை
அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திமுகவின் சுய நலத்திற்காக அல்ல. தமிழக மக்களின் நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

கொஞ்ச நாட்கள்தான்..
இவ்வளவு நாள் பொறுத்து இருந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான். நான் கொஞ்சம் ஆண்டுகளோ, கொஞ்சம் மாதங்களோ இல்லை.. கொஞ்சம் நாள்தான்

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்
விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தயாராக இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையை நிச்சயமாக தி.மு.க. உருவாக்கி தரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications