கண்புரை அறுவை சிகிச்சை.. கருப்பு கண்ணாடியுடன் சட்டசபை வந்த ஸ்டாலின்.. நலம் விசாரித்த முதல்வர்!
சென்னை: கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு சென்னை சங்கர நேத்ராலயாவில், கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் கடந்த 3 நாட்களாக அவர் சட்டசபைக்கு வர முடியவில்லை. இன்று அவர் கருப்பு கண்ணாடி அணிந்து சட்டசபை வந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

சட்டசபைக்குள், ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார். சில அமைச்சர்களும் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து அக்கறையோடு விசாரித்தனர். நலம் விசாரித்தவர்களிடம் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதேபோல, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய சபாநாயகர் தனபாலிடம், ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
ஜெயலலிதா இருந்த காலகட்டங்களில் மாவட்ட அளவில் கூட திமுகவினர் இல்ல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட அதிமுக நிர்வாகிகள் செல்ல கூடாது என கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-திமுக இரு கட்சியினருமே நெருக்கம் காட்டி வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக சூடான கருத்துக்களை பரிமாறிக்கொண்டாலும், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் நேசம் காட்டிவருவது ஆரோக்கிய அரசியலை நோக்கி தமிழகம் பயணிப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications