உடன்பிறப்புகளே என அழைக்கவே கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்.. மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
கருணாநிதி உடன்பிறப்புகளே என அழைக்கத்தான் ஓய்வில் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது என்கிறார் ஸ்டாலின்.
Recommended Video

சென்னை: கருணாநிதி ஓய்வில் இருப்பது கூட 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என அழைப்பதற்காகத்தான் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

உலகத் தமிழ் மக்களின் சிந்தையெல்லாம் நீக்கமற நிறைந்து-நெஞ்சினில் நித்தமும் இனிக்கும் ஆருயிர்த் தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளில், அவரிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தேன்.
இந்திய அரசியலின் மூத்த தலைவராகவும், தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணியாகவும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திகழும் தலைவர் கருணாநிதியின் வாழ்வும் வளமார்பணியும், தமிழ் மொழிக்கும்-தமிழ் இனத்திற்கும்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்துணையாக இருக்கின்றன.
ஓய்வறியாச் சூரியனாக உழைத்த கருணாநிதி தற்போது ஓய்வில் இருப்பதுகூட, அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வைத் தந்து மீண்டும் அவர், 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று அந்த மந்திரச் சொற்களால், தமது காந்தக் குரலில் நம்மையெல்லாம் அழைப்பதற்காகத்தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நம்மைத் தொடர்ந்து வழிநடத்திட, நூறாண்டு கடந்து வாழவேண்டும் என கருணாநிதியை அனைவரும் வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்!
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications