18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கோழைத்தனம் - ஸ்டாலின்
சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: குதிரை பேர ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி செய்துள்ளார். இதனை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக எம்எல்ஏக்கள் தங்களின் விடுதியை காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர்.
இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதல்வரும் சபாநாயகரும் கூட்டுச்சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
|
கோழைத்தனம்
கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
|
அரசியல் நெருக்கடி
ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கடமை தவறிய ஆளுநர்
அரசியல் சட்ட கடமையை செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

பதில் சொல்ல வேண்டும்
பெரும்பான்மையை இழந்த அரசு கஜானாவை கையாள மத்திய பாஜக அரசு அனுமதித்துள்ளது என்றும், மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்துக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications