தடை செய்யப்பட்ட ரூபாய்கள்... தவித்த மக்கள் - கண்டு கொள்ளாத தமிழக அரசு
500,1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர் தமிழகத்தில் ஏழை, நடுத்த மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீது மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தின் நடுத்தரவர்க்கத்தினர் பரிதவித்தனர். நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் அதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்தாலும் அவைகள் மக்களுக்கு சென்று சேராததால், இனி 500, 1000 ரூபாய் செல்லாது என்கிற தகவல் மட்டுமே அவர்களை ஆக்ரமித்தது. அதனால், செவ்வாய்கிழமை முழுவதும் மக்கள் பட்ட கவலைகளும் அவஸ்தைகளும் சொல்லி மாளாது.
இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக தெளிவான வழிகாட்டுதல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்கிற கோபம் மக்களிடம் ஆங்காங்கே வெளிப்பட்டது. தமிழக அரசு ஏன் எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை? அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தனர்? என்பது பற்றி விசாரித்தபோது, மத்திய கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராமமோகனராவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் உடனடியாக நிதித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்.சையும் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையும் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்தார். இதில், சண்முகத்தை மட்டுமே அவரால் தொடர்புகொள்ள முடிந்தது. ஓ.பி.எஸ்.சை தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்துள்ளார் ஓ.பி.எஸ். ! இரவு முழுவதும் மக்கள் பரிதவித்துக்கொண்டிருப்பதும் , 500, 1000 நோட்டுக்களை மாற்ற ஆலாய் பறந்துகொண்டிருந்ததும் நிதியமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இத்தனைக்கும் முதல்வர் கவனித்து வந்த இலாகாக்களை ஓ.பி.எஸ். கவனித்து வரும் நிலையில் மக்களின் அவஸ்தைகள் அவருக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அமைச்சராவது அதிகாரிகளை தொடர்புகொண்டு விவாதித்திருக்க வேண்டும். அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை, இந்த நிலையில், அப்பல்லோவிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் தந்ததோடு, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தமிழக மக்களின் அவஸ்தைகளை தெரிவித்திருக்கிறார்கள் உயரதிகாரிகள்.
அவரோ, மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. ஒரு அறிக்கை மூலம் அதனை வெளியிட்டு மக்களின் பயத்தைப் போக்குங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் பேசுவதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில், நோட்டுக்கள் விசயத்தில் அப்பல்லோவிலிருந்து எந்த உத்தரவும் வராத நிலையில் தன்னிச்சையாக நாம் எப்படி அரசு அறிவிப்பை செய்வது? என்கிற குழப்பத்திலும் ஆலோசனையிலுமே நேரத்தை கடத்திக்கொண்டே இருந்தார்கள் உயரதிகாரிகள். இருப்பினும் எந்த உத்தரவும் அதிகாரிகளுக்கு சொல்லப்படாததால் அவர்களும் அமைதியாகி விட்டனர் என்று கூறினார்கள் கோட்டை அதிகாரிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications