தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல.. அமைச்சர் ஆவேசம்

தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடியை குறை சொன்னதும் கொந்தளித்த அதிமுக அமைச்சர்-வீடியோ

    சென்னை: தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

    கடந்த சில நாட்களாக ரஜினி கமல் அரசியல் வருகை குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் கட்சி இணைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பூதாகரமாகியுள்ளது,

    பீடா விற்பவர் அல்ல

    பீடா விற்பவர் அல்ல

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல, அவர் நாட்டின் பிரதமர் என தெரிவித்துள்ளார்.

    வந்த வேகத்தில் ஓடிவிடுவார்

    வந்த வேகத்தில் ஓடிவிடுவார்

    மேலும் கமல்ஹாசன் யாரை எதிர்த்து அரசியலில் ஈடுபடுகிறார் என்பதே தெரியவில்லை என்றும் அவர் கூறினார். அதோடு கமல்ஹாசன் வந்த வேகத்தில் திரும்ப ஓடிவிடுவார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

    நாட்டை விட்டு ஓடப்போவதாக

    நாட்டை விட்டு ஓடப்போவதாக

    நடிகர் கமல்ஹாசன் துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓடி விடுவார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே விஸ்வரூபம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போதே நாட்டை விட்டு ஓடப்போவதாக கமல் கூறினார் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

    பெயர் கெட்டுவிடும்

    பெயர் கெட்டுவிடும்

    நல்ல மனிதரான ரஜினிகாந்த் இப்போது இருப்பது போன்றே இருந்துவிடலாம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ரஜினி என்னசொன்னாலும் பிரச்சனையாகி விடுகிறது என்ற அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது பெயர் கெட்டுவிடும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+