குரங்கை கொடுமைப்படுத்தி வயரால் கழுத்தை இறுக்கி எரித்துக் கொன்ற மருத்துவ மாணவர்கள்.. வேலூரில் ஷாக்
குரங்கை கொடுமைப்படுத்தி கொலை செய்த மருத்துவமாணவர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது. அதனை பிடித்து கால்களை கட்டிப்போடி குச்சியாலும், பெல்ட்டாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர் சில மாணவர்கள்.

இதனால் அந்த குரங்கின் கால்களும், எலும்புகளும் உடைந்தன. ஆனாலும் திருப்தியடையாத அந்த மருத்துவ மாணவர்கள் ஒரு இரும்பு கம்பியை அதன் ஆசனவாய் வழியாக செலுத்தி அதனை கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பரிதாபமாக உயிரிழந்த அந்த குரங்கை எரித்து உடலை மாணவர் விடுதி மெஸ்ஸின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனிடையே மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள், ஏலும் பாக்யம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உடபடுத்தியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 4 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் மருத்துவ மாணவர்கள் 2 பேர் நாயை வீட்டு மாடியில் இருந்து தூக்கி எரிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தற்போது குரங்கை அடித்து கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications