டெல்லியில் கேஜ்ரிவால் ஜெயித்தது மாதிரி விஜயகாந்த் வெல்வார்: பிரேமலதா நம்பிக்கை
நெல்லை: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைப் போல தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெல்வார் என்று அக்கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி இடையே கூட்டணி உருவானதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தனித்து பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டார். நெல்லையில் நேற்று தமது பிரசாரத்தை பிரேமலதா தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மாநகராட்சிகளில் பிரேமலதா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனிடையே இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டி ஆரோக்கியமானது. ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் தே.மு.தி.க.+ மக்கள் நல கூட்டணிக்கு உள்ளது.
அ.தி.மு.க.- தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. விஜயகாந்த் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளார்.
பெண்கள் முன்னேற்றம், தமிழக தன்னிறைவு என 2 தேர்தல் அறிக்கைகளை விஜயகாந்த வெளியிட்டுள்ளார். இன்னும் 2 தேர்தல் அறிக்கைகள் தயாராகிறது. தே.மு.தி.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
வேட்பாளர் அறிவிப்பிற்கு பின் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு வெற்றியை தந்தது போல தமிழகத்தில் விஜயகாந்துக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications