குடிபோதையில் மகளிடம் தகராறு.. மருமகனை அடித்தே கொன்ற மாமியார்.. விருதுநகர் அருகே ஷாக்!
விருதுநகர் அருகே குடிபோதையில் மகளிடம் தகராறு செய்த மருமகனை, மாமியார் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்: விருதுநகர் அருகே குடிபோதையில் மகளிடம் தகராறு செய்த மருமகனை, மாமியார் உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாமியாரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள வேலாயுதபுரத்தை அடுத்த சி.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

செல்லப்பாண்டி அதே பகுதியில் உள்ள பால்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
சமபவத்தன்றும் செல்லப்பாண்டி வீட்டிற்கு வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து முத்துலட்சுமியின் தாயார் ராஜம்மாள் மருமகன் செல்லப்பாண்டியிடம் கேட்டுள்ளார்.
அப்போது 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜம்மாள் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த செல்லப்பாண்டியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications