சென்னை தீம் பார்க் ராட்டினத்தில் இருந்து விழுந்து பெண் சாவு.. தாய்க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
சென்னை: சென்னை பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பூங்கா உரிமையாளர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
சென்னை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி. பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ‘ஆக்டோபஸ்' என்ற ராட்டினத்தில் சுற்றும்போது, நாகலாந்தை சேர்ந்த அபியா மேக் (20) என்ற விமானப் பணிப் பெண் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது தோழிகளுடன் விடுமுறையை கொண்டாட அந்த பூங்காவுக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பொழுதுபோக்கு பூங்காவின் உரிமையாளர் ஈ.வி.பெருமாள் ரெட்டியை அதே மாதம் 20ம் தேதி கைது செய்தனர். அவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் சந்தோஷ் ரெட்டி உள்பட பலர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை ஹைகோர்ட்டில் இவ்வழக்கு நடைபெறும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், இந்தசம்பவம் தொழில்நுட்ப கோளாறால் நடந்தது என்பதால், பூங்காவின் உரிமையாளர் வேண்டுமென்றே இச்செயலை செய்ததாக கூற முடியாது என்று வாதிட்டார். மேலும், இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தரவும் தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.
அபியா மேக் வருமானத்தை நம்பிதான், அவரது குடும்பம் இருந்தது என்பதால், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாசுகி ரமணன் கேட்டார். இதையடுத்து ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான காசோலை, அபியா மேக்கின் தாயார் சசுலே மேக்கிடம் வழங்கப்பட்டது.
மாநில நுகர்வோர் ஃபோரத்திலும், இவ்வழக்கு பெண்டிங்கில் இருப்பதை சுட்டிக்காட்டிய கோர்ட், ஒருவேளை, நுகர்வோர் ஃபோரம், இதைவிட கூடுதல் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டால், பொழுதுபோக்கு பூங்கா, கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், இதைவிட குறைவான இழப்பீடு தர உத்தரவு வந்தால், பாதிக்கப்பட்டவர் தரப்பு, பணத்தை திருப்பி தர அவசியம் இல்லை என்றும் கோர்ட் கூறியது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications