கலெக்டர் அலுவலகத்தில் ‘ஒப்பாரி’ வைத்து ஆர்ப்பாட்டம்... மகன், மகளுடன் பெண் கைது!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பூர்வீக சொத்தில் பங்கு பெற்றுத் தரக் கோரி கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுக்க வந்தபோது, ஒப்பாரி வைத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தததால் பெண்ணையும், அவரது இரண்டு குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி மீனாட்சி. இவர்களுக்கு முத்துப்பாண்டி என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். ராமலிங்கம் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் இவர்கள் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ராமலிங்கம் திடீரென இறந்து போனார்.

அதன்பின்னர் மீனாட்சி குடும்பத்துடன் கணவரின் சொந்த ஊரான லாடனேந்தலுக்கு வந்துள்ளார். அங்கு தனது கணவரின் பூர்விக சொத்தில் தனக்கும் பங்கு தரக்கோரி, ராமலிங்கத்தின் அண்ணனிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை நில அபகரிப்பு பிரிவில் மீனாட்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பூர்வீக சொத்தில் 14 சென்ட் நிலத்தை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி திருப்புவனம் தாசில்தாருக்கு தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை மீனாட்சிக்கு சொத்து பிரித்து தரப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் உரிய விளக்கமும் அவருக்கு தரவில்லையாம்.
இதனால், தங்களுக்கு வரவேண்டிய கணவரிம் பங்கை மீட்டுத்தரும்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலத்தில் உள்ள பூங்காவில் மீனாட்சி தனது மகன், மகளுடன் தங்கி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், கூறியபடி ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் கலெக்டரின் கார் வரும் பாதையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அவர் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். அப்போதும் அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மீனாட்சி தன்னுடைய மகன், மகளுடன் வந்து கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தார். அதில், ‘சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் உள்ள தனது கணவரின் பூர்வீக சொத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய பங்கை அவரது சகோதரர் தர மறுக்கிறார். எனவே அதனை பெற்றுத்தர வேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மனுவைக் கொடுத்த பின்னர் மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் கூட்டம் நடந்த இடத்தில் சத்தம் போட்டு ஒப்பாரி வைத்து அழுதார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், அவர்கள் மூவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கோபிகிருஷ்ணன் சிவகங்கை நகர் போலீசில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மீனாட்சி உள்பட 3 பேர் மீதும் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து சிவகங்கை போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications