அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 31 பேர் காயம்!: மோட்டார் சைக்கிள் பரிசு பெறும் வீரர் யார்?

Subscribe to Oneindia Tamil

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 31 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தை பொங்கல் திருநாளை ஒட்டி அலங்காநல்லூரில் ஆண்டு தோறும் ஜனவரி 16ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதற்கான காளைகள் முன்பதிவு மூன்று நாள்களும் வீரர்களுக்கான முன்பதிவு இரண்டு நாள்களும் நடைபெற்றன. இதுவரை 650 காளைகளின் உரிமையாளர்களும் 650 வீரர்களும் ஜல்லிகட்டில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.

சீறி வந்த காளைகள்

சீறி வந்த காளைகள்

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் போட்டி தொடங்கியது. வீரர்கள் மற்றும் மாடுகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பரிசு

மோட்டார் சைக்கிள் பரிசு

இந்த ஆண்டு காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு இருச்சக்கர மோட்டர் வாகனம் வழங்கப்படும். அதேபோல், மாடுபிடி வீரர்கள் யாராலும் அடக்க முடியாத காளைக்கு பரிசாக அதன் உரிமையாளருக்கும் இருச்சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள்

வெளிநாட்டுப் பயணிகள்

ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குவிந்துள்ளதால் அலங்காநல்லூர் விழாகோலம் பூண்டுள்ளது.

பாதுகாப்பு பணிகள்

பாதுகாப்பு பணிகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் ஆளில்லா விமானம் மூலம் போட்டியை கண்காணிக்கு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் சிராவயல்புதூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 354 காளைகள் பங்கேற்றுள்ளன.

திருச்சியில் காயம்

திருச்சியில் காயம்

மாட்டு பொங்கலையொட்டி திருச்சி அகேயுள்ள பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 346 காளை மாடுகள் களமிறக்கப்பட்டன. 247 வீரர்கள் மாடுகளை பிடித்தனர். மாடுகளை பிடித்தபோது 45 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில், 5 வீரர்களும், 7 பார்வைகளும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு

இதேபோல், மதுரை, பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 530 காளைகள் களமிறக்கப்பட்டன. காலை 8 மணிக்கு துவங்கி பகல் 2 மணி வரை நடைபெற்ற போட்டியில் 41 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+