மழை காரணமாக கட்டடம் தகர்ப்பு தாமதமானது: காஞ்சிபுரம் ஆட்சியர்
மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.
சென்னை: மழை காரணமாக மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் தகர்ப்புக்கு தாமதம் ஆனதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதியன்று 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 பேர் பலியாகினர். இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அந்த கட்டடத்தின் அருகில் இருந்த மற்றொரு 11 மாடி அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், மவுலிவாக்கம் கட்டடம் இன்று மாலை 7 மணி அளவில் இடிக்கப்பட்டது. பிற்பகலில் இடிக்கப்படும் என கூறப்பட்ட கட்டடம் தாமதாமாகவே இடிக்கப்பட்டது. மேலும், மூன்றே வினாடிகளில் கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது.
கட்டடம் தகர்க்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: மழை காரணமாகவே கட்டட இடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 11 மாடி கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு செய்ததும் தாமதத்திற்கு காரணம். தற்போது சுற்றுப்புறப் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications