முல்லை பெரியாறு பகுதியில் வாகன பார்க்கிங் கூடாது.. தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
சென்னை: முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் வாகன நிறுத்தத்தைக் கட்டுவதற்கு கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், கேரளாவைச் சேர்ந்த தங்கப்பன், ஆபிரகாம் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்துள்ளது.
அந்த இடம் தேக்கடி வனப்பகுதியில் வருகிறது என்றும் அங்கு ‘‘கார் பார்க்கிங்'' அமைத்தால், வனவிலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், கார் பார்க்கிங் கட்ட தேர்வு செய்துள்ள இடம், தமிழக அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்பதோடு, அந்த இடம் முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. எனவே சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்புவரக்கூடும் என்பதால் கார் பார்க்கிங் கட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கூடுதலாக 72 பக்க ஆதாரங்களை இன்று, தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் பார்க்கிங் கட்ட கூடாது என்பதை வலியுறுத்தும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications