தமிழகத்தின் வளர்ச்சிக்கு 'லேடி' காரணமல்ல என் 'டாடி'தான் காரணம்: ஸ்டாலின்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான அலை வீசுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
காலை 9 மணியளவில் பிரசாரத்தை தொடங்கி பொன்மலை, ஸ்ரீரங்கம், என கிராமம், கிராமமாக நாங்கள் பயணித்து வந்திருக்கிறோம்.

தமிழகம் முழுவதும்
கடந்த 14ம் தேதியில் இருந்து 22 வரை 8109 கிலோமீட்டம் பயணம் செய்துள்ளேன். 37 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். சாலைகளில் பயணித்தேன் மற்றவர்கள் போல ஹெலிகாப்டரில் வரவில்லை.

ஜெயலலிதாவின் பெயர்
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறக்கிறார். இனி ஜெயலலிதாவிற்கு ஹெலிகாப்டர் என்றோ, ஹெலிகாப்டருக்கு ஜெயலலிதா என்றோ பெயர் மாறினாலும் மாறலாம்.

என்னுடைய டாடிதான்
குஜராத் வளர்ச்சிக்கு மோடி என்கிறார்கள். தமிழக வளர்ச்சிக்கு இந்த லேடிதான் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். என்னுடைய டாடியால்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றது இந்த லேடியால் அல்ல.

மோடி என்ற ஜாடிக்கேத்த மூடி
மக்களை ஏமாற்றும் கேடிகள் இவர்கள் என்று கூறிய ஸ்டாலின், மோடி என்ற ஜாடிக்கேத்த மூடி ஜெயலலிதா என்கிற லேடி என்றார்
மோடியாக இருந்தாலும் சரி, கேடியாக இருந்தாலும் ஜோடியாக இருந்தாலும் சரி மக்கள் கொடுப்பார்கள் சவுக்கடி

ராமதாஸை ஏன் பார்க்கலை
மோடி ரஜினியைப் பார்த்தார், மோடியை விஜய் சென்று பார்த்தார், அதெல்லாம் சரிதான். டாக்டர் ராமதாஸை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

வாய்ப்பந்தல் போட்ட ஜெ
வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம், மணலை கயிராக திரிப்போம் என்றார் ஆனால் எதையுமே செய்யவில்லை

மின்சாரம் இல்லை
2 மணிநேரம் மட்டுமே திமுக ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு மின்சாரம் இல்லாத மாநிலம் ஆக்கிவிட்டார் ஜெயலலிதா.

அக்கிரமக்காரி ஜெயலலிதா
முட்டாள்கள் தினத்தில் பேசிய ஜெயல்லிதா, மின் தட்டுப்பாடு பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். சில தினங்களில் சதி நடக்கிறது என்றார். அபாண்டமாக குற்றம் சாட்டினார். எதற்கெடுத்தாலும் கலைஞர், கலைஞர் என்கிறார்.காலையில் எழுந்து இரவு படுக்கும் வரை அம்மையாருக்கு கலைஞர் நினைப்புதானா?

முதல்வராக இருக்க லாயக்கில்லை
சதி நடப்பதை கண்டுபிடிக்க முடியாத ஜெயல்லிதா முதல்வராக இருக்கவே லாயக்கற்றவர்

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
தமிழகம் முழுவதும் மக்கள் படும் துயரங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல... மின்சாரமில்லை... குடிக்க தண்ணீர் இல்லை... வேலையில்லை என்று அடுக்கினார் ஸ்டாலின்.

அம்மா இல்லை சும்மா
அம்மா டிபன் சென்டர், அம்மா சப்பாத்தி விற்பனை செய்கின்றனர். இனி அம்மா உப்புமா, அம்மா தோசை விற்பார்கள். அது கூட பரவாயில்லை. அம்மா தண்ணீர் விற்கிறார்கள். தாய்பாலை விற்றால் தாயல்ல அவர் பேய். அதுபோல தண்ணீரை விற்றால் அம்மா இல்லை சும்மா என்றும் போட்டுத்தாக்கினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications