சசிகலா முதல்வராக தேர்வானது எப்படி.. மர்மங்கள் விரைவில் அம்பலமாகும்.. ஸ்டாலின் உறுதி
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா சட்டசபைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வாகியது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது. விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வானது மர்மமாகவே இருக்கிறது என்றும் விரைவில் உண்மைகள் வெளி வரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில் அவசர அவசரமாக சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அப்படி நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தமிழ்நாட்டை இட்டுச் செல்லும். எனவே, தீர்ப்பு வந்த பின்னர் சசிகலா பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க. ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக செயலர் வெங்கடரமணன் ஆகியோர் பதவி விலகியது என அனைத்துமே மர்மமாகவே உள்ளது என்று கூறினார்.
மேலும், சட்டசபைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வானதும் மர்மமாகவே உள்ளது. இந்த மர்மங்கள் எல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications