வேலூர்: வானத்தில் இருந்து விழுந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி - 3 பேர் காயம்
வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அருகே உள்ள பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளார் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றாம் பள்ளியில் பாரதிதாசன் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், அந்த கல்லூரி வளாகத்தில் திடீரென ஒரு மர்மப் பொருள் வானிலிருந்து விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அந்த கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. அத்தடன், கல்லூரியில் இருந்த கண்ணாடிகளும் நொறுங்கியது.

டிரைவர் காமராஜ் என்பவர் வெள்ளேரிபட்டு நாட்றம்பள்ளி வட்டம் பகுதியை சேர்ந்தவர். தற்காலிக ஓட்டுனராக கல்லூரியில் பணி புரிந்து வந்தார். இன்று பணியின் போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் கழுவ சென்ற போது பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. தண்ணீர் தொட்டியும் சிதறியது. இதில் டிரைவர் காமராஜ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
சத்தம் கேட்டு கல்லூரி வளாகத்தில் இருந்த சக ஊழியர்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.அத்துடன், அந்த கல்லூரிக்கு அருகில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சசிக்குமார் (36), முரளி (27) ஆகிய 2 பேரும் பலத்த தீக்காயமடைந்தனர். மருத்துவமனைன்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஒருவருக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மர்மப் பொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவகின்றனர். கல்லூரி வளாகத்தில் 5 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளரிடம் பேசிய வட்டாட்சியர் செல்வராஜ், வெடித்த பொருள் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய குழுவினர் வந்து கொண்டிருப்பதாகவும், சம்பவத்தில் காயமடைந்த தோட்டப்பணியாளர்கள் 3 பேரும் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனிடையே சம்பவம் நடந்த தனியார் கல்லூரியில் அமைச்சர் வீரமணி ஆய்வு மேற்கொண்டுள்ளார். வெடி விபத்து குறித்து வட்டாட்சியரிடம் விபரம் கேட்டறிந்தார்.
மர்ம எரிபொருள் விழுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு பீதியுடன் திரண்டனர். எரிகற்கள் எதுவும் விழுந்திருக்கலாம் என்றும் பேசிக்கொள்வதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications