விமான நிலையம் முற்றுகை… இலங்கை கொடி எரிப்பு: நாம் தமிழர் கட்சியினர் கைது
மதுரை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் 30 பேர் மதுரை விமான நிலையம் புறப்பட்டு வந்தனர். பெருங்குடியில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரது உருவ படங்களை தூக்கிலிட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சியினர் இலங்கை அரசின் கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications